திருமுழுக்கு யோவான் பிறப்பு பெருவிழா சிந்தனை | 24/06/2021| வியாழன்
திருமுழுக்கு யோவான் பிறப்பு பெருவிழா சிந்தனை | 24/06/2021| வியாழன்
இன்றைய இறைச் சிந்தனை
24/06/2021|வியாழன்
எசாயா : 49 : 1 - 6
தி. பணிகள் : 13 : 22 - 26
மத்தேயு : 1 : 57 - 66, 80
அதிசயப் பிறப்பும் அர்ப்பணத்தின் சிறப்பும்
இறையேசுவில் பாசமிக்கவர்களே!
இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் பனிரண்டாம் வாரம் வியாழக்கிழமையைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறோம். இன்றுத் திருஅவையானது புனிதத் திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடி மகிழ வாய்ப்பை வழங்கியிருக்கிறது. பொதுவாகத் திருஅவை புனிதர்களின் விண்ணகப் பிறப்பு விழாவைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் மிகச் சொற்ப நபர்களின் மண்ணக விழாவைச் சிறப்பித்துத் திருஅவைக் கொண்டாடுவதில் திருமுழுக்கு யோவானும் ஒருவர். இயேசு, மரியா இவர்கள் வரிசையில் திருமுழுக்கு யோவானுக்கும் முக்கியமான இடத்தை வழங்கியிருக்கிறது என்றால் அவரது அதிசயப் பிறப்பும் அர்ப்பணத்தின் சிறப்புமாகும். இதனையே இன்றைய இறைச் சிந்தனையின் மையக்கருவாக எடுத்திருக்கிறோம்.
இவ்வுலகில் சிலருடையப் பிறப்பேச் சிறப்பாக அமைந்து விடுகிறது. சிலருடையப் பிறப்புச் சிறப்பானதாக இல்லையென்றாலும், இறப்புச் சிறப்படைந்துவிடுகிறது. இன்றுத் திருஅவைப் பிறப்பு விழாவைக் கொண்டாடும் திருமுழுக்கு யோவானின் பிறப்புச் சிறப்பானதாகவும், சிந்திக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. மலடி என்று மற்றவர்களால் பார்க்கப்பட்டு, இகழப்பட்ட எலிசபெத்தின் மீது கடவுளின் பார்வை விழுந்தது. வயது முதிர்ந்த நேரத்தில் எலிசபெத்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்றச் செய்தி மரியா வழியாக எலிசபெத்துக்குக் கொடுக்கப்படுகிறது.
(லூக் 1: 39 - 41). மரியாவின் வாழ்த்தைக் கேட்ட எலிசபெத்தும், கருவறையில் கண்விழிக்கக் காத்திருந்த குழந்தையும் அக்களித்து அகமகிழ்ந்தார்கள்.
இதைதான் இன்றைய முதல் வாசகம் சுட்டிக்காட்டுகிறது.
கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்
(எசா 49 : 1-2) எனக் கூறுகிறது. திருமுழுக்கு யோவானைக் கடவுள் தனிப்பட்ட அன்பால் கருவில் உருவாக்கி, உயிர் கொடுத்ததால் அவருடையப் பிறப்புச் சிறப்பானதாக மாறியது. அவருடைய அழைப்பின் அர்ப்பணத்தால் வாழ்வும், இறப்பும் சிறப்படைந்தது. இயேசுவின் வருகைக்கு முன்பே யோவான் மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் (தி.பணி 13 : 22- 24) என்றுப் பறைசாற்றினார். தனது வாழ்வை நீதிக்காக அர்ப்பணித்தார். எனவேதான் அவருடைய அதிசயப் பிறப்பும், அர்ப்பணத்தின் சிறப்பும் நமக்குப் பாடமாக மாறியிருக்கிறது.
அன்பு மிக்கவர்களே! நாம் நினைக்கும் திருமுழுக்கு யோவான் அல்ல அவர் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் சான்றுப் பகர்கிறார். அவர் அவரை எப்போதுமே உயர்ந்தவராகவும், சிறந்தவராகவும், சிறப்பானவராகவும் உயர்த்திக் காட்டவில்லை. எனக்குப்பின் வருபவர் மெசியா என்பதைச் சுட்டிக்காட்டித் தன்னை மிகக் குறைந்தவராகக் குறிப்பிடுகிறார் யோவான். ஆனால் இறைமகன் இயேசு இவரை விடப் பெரியவர், இன்னும் தோன்றவில்லையெனச் சான்றுப் பகர்ந்தார்.
தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்
(லூக்கா 18 :14). நாமும் யோவானைப் போல் வாழ வரவேண்டிச் செபிப்போம்!
அருட்பணி. எ.ஒய்சிலின் சேவியர்,
பங்குத்தந்தை, கொல்வேல்.
What's Your Reaction?